Salaiyoram Song Lyrics

in Payanangal Mudivathillai

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சாலையோரம் சோலை ஒன்று
ஆடும் சங்கீதம் பாடும்
சாலையோரம் சோலை ஒன்று
ஆடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
சாலையோரம் சோலை ஒன்று
ஆடும் சங்கீதம் பாடும்

ஆண் : பாவை இவள் பார்த்து விட்டால்
பாலைவனம் ஊற்றெடுக்கும்
கண்ணிமைகள்தான் அசைந்தால்
நந்தவனக் காற்றடிக்கும்

பெண் : நீங்கள் என்னை பார்த்தால்
குளிர் எடுக்கும்
மனதுக்குள் ஏனோ மழை அடிக்கும்

ஆண் : ஹேய் பாரிஜாத வாசம்
நேரம் பார்த்து வீசும்
பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும்

பெண் : மொட்டுக்கதவை பட்டு வண்டுகள்
தட்டுகின்றதே இப்போது

பெண் : சாலையோரம் சோலை ஒன்று
ஆடும் சங்கீதம் பாடும்

ஆண் : கண்ணாளனை பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனை பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து
சாலையோரம் சோலை ஒன்று
ஆடும் சங்கீதம் பாடும்

பெண் : கடற்கரை ஈரத்திலே
காலடிகள் நீ பதிக்க
அலை வந்து அழித்ததினால்
கன்னி மனம்தான் துடிக்க

ஆண் : கடலுக்கு கூட ஈரமில்லையோ
நியாயங்களை கேட்க யாருமில்லையோ

பெண் : சேர்த்து வைத்த தாகம்
கண்ணால் இன்று கீறும்
சேர்த்து வைத்த தாகம்
கண்ணா இன்று கீறும்

ஆண் : பேசும் கிள்ளையே ஈர முல்லையே
நேரமில்லையே இப்போது

ஆண் : சாலையோரம் சோலை ஒன்று
ஆடும் சங்கீதம் பாடும்

பெண் : கண்ணாளனை பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனை பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து

இருவர் : தாராதாத்தா தாராதாத்தா தா தாரா ரா…

Leave a Comment