Sembaruthi Poovu Song Lyrics

in Chembaruthi

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா,
மனோ மற்றும் பானுமதி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ……………………………..

பெண் : செம்பருத்தி பூவு
சித்திரத்தை போல
அம்பலத்தில் ஆடுதிங்கே
செம்பருத்தி பூவு
சித்திரத்தை போல
அம்பலத்தில் ஆடுதிங்கே

குழு : குப்பத்திலே வாழும்
குண்டுமணி பாரு
கொத்துமலர் சூடும்
முத்துமணி தேரு
அழகை பார்த்தா
அசந்து போகணும்
அடடே அடடே அடடடே

ஆண் : சீமைத்தொரை போல
மாமன் வர பார்த்து
செம்பருத்தி பாடுதிங்கே
சீமைத்தோரை போல
மாமன் வர பார்த்து
செம்பருத்தி பாடுதிங்கே

குழு : அக்கரையில் வாழும்
ஆணழகன் பாரு
இக்கரையில் ஈடாய்
இன்னொருவர் யாரு
அழகை பார்த்தா
அசந்து போகணும்
அடடே அடடே அடடடே

ஆண் : சீமைத்தொரை போல
மாமன் வர பார்த்து
செம்பருத்தி பாடுதிங்கே

குழு : …………………………….

பெண் : கை வலையில்
மாட்றுகின்ற
உப்புக்கடல் மீனு
கண் வலையில் வாங்கி வந்த
கன்னி இள மானு

பெண் : கட்டுமரம் ஏறுகின்ற
மீனவரின் சாதி
கண்டெடுத்த பெண்ணரசி
வெண்ணிலவின் சோதி

குழு : எங்க மகாராணி இளமேனி
ஒரு மாங்கனி
சின்ன இடை ஆடி இசைப்பாடி
வரும் பூங்கொடி
யார் தான் இங்கு ஈடு
இவை கொம்புத்தேனின் கூடு
உடல் வனப்பும் தளதளப்பும்
அழகு சுரங்கம் தான்

ஆண் : ஹேய்….
சீமைத்தொரை போல
மாமன் வர பார்த்து
செம்பருத்தி பாடுதிங்கே

பெண் : செம்பருத்தி பூவு
சித்திரத்தை போல
அம்பலத்தில் ஆடுதிங்கே

குழு : ……………………………………..

குழு : ………………………………………

ஆண் : எட்டடுக்கு மாளிகையில்
வாழுகிற ஆளு
சொத்து சுகம் கோடி உண்டு
அக்கம் பக்கம் கேளு

ஆண் : பட்டணத்து பாட்டியமா
பெத்தெடுத்த பேரன்
முக்கடலில் மூச்சடக்கி
முத்தெடுக்கும் வீரன்

குழு : மண்டி இடும் பாரு
இந்த ஊரு
மகராசன் தான்
மன்மதனும் கூட
புகழ் பாட
இவன் தாசன் தான்
யாரும் ஈடு இல்ல
இவன் எங்க வீட்டு பிள்ளை
இவன் உருவம் இளம்பருவம்
ஒருத்தி அணைக்க தான்

பெண் : செம்பருத்தி பூவு
பெண்ணொருத்தி போலே
சேலை கட்டி ஆடட்டுமே
சீமைத்தொரை போல
மாமன் வர பார்த்து
மாலை கட்டி போடட்டுமே

குழு : ஒன்னும் ஒன்னும் சேந்து
ஒத்துமையா வாழ
இல்லறத்தில் நாளும்
நல்லறங்கள் சூழ
மேளம் தாளம் முழங்க போகுது
ஊரே வாழ்த்தை
வழங்க போகுது

குழு : செம்பருத்தி பூவு
பெண்ணொருத்தி போலே
சேலை கட்டி ஆடட்டுமே
சீமைத்தொரை போல
மாமன் வர பார்த்து
மாலை கட்டி போடட்டுமே

Leave a Comment