in Kanni Rasi
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : சுக ராகமே சுக போகமே
சுக ராகமே என் சுக போகம் நீயே
கண்ணே கலை மானே
கதை பேச வருவாயோ
ஆண் : அன்பே அனல் வீசும்
விழி வாசல் குளிராதோ
பெண் : இசை ராஜனே உன்
இளம் வீணை நானே…..
ஆண் : ருசி மிகுந்த மாங்கனி நீயே
பசிச்சவன் நான் பார்த்திருந்தேன்
பரவசமாய் பாடிடும் வாயில்
அதிரசமாய் நீ இனித்தாய்
பெண் : வளையல்களே வருகையிலே
வயசு மனம் தாங்காது
கொலுசுகளும் குலுங்கையிலே
எவர் மனதும் தூங்காது
ஆண் : அதிஷ்டம் வந்தாச்சு
அழைப்பும் தந்தாச்சு
குயிலே நிஜம் தானே
பெண் : கண்ணா கலைவண்ணா
எனை மீட்ட வருவாயோ
ஆண் : சுக ராகமே என் சுக போகம் நீயே
குழு : ஆஅ…..ஆஅ…..ஆஅ……
ஆஅ………………………
ஆண் : நடந்து வரும் ஓவியம் போலே
நினைவினிலே வாழ்பவளே
பருவ மகள் வாலிபக் கோலம்
எனை மயக்கும் ஓவியமோ
பெண் : இளயவரே இனியவரே
எனதுயிரே நீதானே
உலகினிலே இனி தினமே
வலம் வருவோம் நாம்தானே
ஆண் : ஜொலிக்கும் உன் மேனி எனக்கே
எந்நாளும் ரதியே இனித்தேனே
பெண் : கண்ணா கலை வண்ணா
எனை மீட்ட வருவாயோ
பெண் : இசை ராஜனே
இளம் வீணையே
இசை ராஜனே உன்
இளம் வீணை நானே
பெண் : கண்ணா கலை மன்னா
எனை மீட்ட வருவாயோ
உயிரே உனை நாடி
இசை தேடி வருவேனே
ஆண் : சுக ராகமே
என் சுக போகம் நீயே…