Thalayai Kuniyum Thamaraye Song Lyrics

in Oru Odai Nadhiyagirathu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ராஜேஸ்வரி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தலையைக் குனியும் தாமரையே
தலையைக் குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
தலையைக் குனியும் தாமரையே

ஆண் : நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
பெண் : ஆ……ஆ……ஆ……ஆஅ…..
ஆண் : நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
பெண் : பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்
பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்
ஆண் : அமுதம் வழியும் இதழைத் துடைத்து
விடியும் வரையில் விருந்து நடத்து…….

பெண் : தலையைக் குனியும் தாமரை நான்
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து

ஆண் : தலையைக் குனியும் தாமரையே

பெண் : காத்திருந்தேன் அன்பே
இனிக் காமனின் வீதியில் தேர் வருமோ
ஆண் : பூமகள் கன்னங்கள்
இனி மாதுளை போல் நிறம் மாறிடுமோ

பெண் : ஆயிரம் நாணங்கள்
இந்த ஊமையின் வீணையில் இசை வருமா
ஆண் : நீயொரு பொன் வீணை
அதில் நுனிவிரல் தொடுகையில் பலசுரமா

பெண் : பூவை நுகர்ந்தது முதல் முறையா
ஆண் : ம்ம் ம்ம் ம்ம்ம்ஹம்ம்
வேதனை வேலையில் சோதனையா
பெண் : முதல் முறையா
ஆண் : இது சரியா
பெண் : சரி சரி பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து
ஆண் : ஆஅ……ஆஅ……அ……..ஆஆ……ஆ…..

பெண் : பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து
ஆண் : உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி
உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி
பெண் : இரண்டு நதிகள் இணைந்து நடக்கும்
புதிய அலைகள் கரையை உடைக்கும்…..

ஆண் : தலையைக் குனியும் தாமரையே
தலையைக் குனியும் தாமரையே
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து

ஆண் : தலையைக் குனியும் தாமரையே

Leave a Comment