Thean Poove Poove Vaa Song Lyrics

in Anbulla Rajinikanth

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தேன் பூவே பூவே வா
தென்றல் தேட
பூந்தேனே தேனே வா
தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான்

பெண் : உனை நினைத்தேன் பூவே பூவே வா
தென்றல் தேட….

ஆண் : பனி விழும் புல்வெளியில்
தினம் தினம் பொன் பொழுதில்
பெண் : கனி விழும் உன் மடியில்
கலந்திடும் உன் உறவில்

ஆண் : நானும் கம்பன் தான் கொஞ்சும் போது
பெண் : ஓ கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது
ஆண் : தேவதேவி என்னோடு தான்

பெண் : உனை நினைத்தேன் பூவே பூவே வா
தென்றல் தேட….

ஆண் : பூந்தேனே தேனே வா
தாகம் கூட

பெண் : இடையினில் உன் விரல்கள்
எழுதிடும் என் சுகங்கள்

ஆண் : அணைக்கையில் உன் உடலில்
அழுந்திடும் என் நகங்கள்

பெண் : மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது

ஆண் : ஆஹ் ஆ ஆ ஆஹ்
காதல் யோகம்தான் கட்டில் மீது

பெண் : காணவேண்டும் உன்னோடு தான்

பெண் : உனை நினைத்தேன் பூவே பூவே வா
தென்றல் தேட….
பூந்தேனே தேனே வா
தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான்

ஆண் : உனை நினைத்தேன் பூவே பூவே வா
பெண் : லால..லாலா

இருவர் : லா லல ல ல லா லால..லாலா

Leave a Comment