Vaigaraiyil Vaigaikaraiyil Song Lyrics

in Payanangal Mudivathillai

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வைகறையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்
வைகறையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்
உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில்
நாளும் நடத்தும் ஊர்வலங்கள்
வைகறையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்

ஆண் : உன் நினைவே எனக்கோர் சுருதி
உன் கனவே எனக்கோர் கிருதி
உன் உணர்வில் மனமே உருகி
வாடுதம்மா மலர்போல் கருகி
பலபல ஜென்மம் நானெடுப்பேன்
பாடல்கள் கோடி நான் படிப்பேன்
அன்பே உனக்கே காத்திருப்பேன்
ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆஅ……ஆஅ….

ஆண் : வைகறையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்

ஆண் : ஆயிரம் ஆயிரம் ஆசைகளை
ஆசையில் உன்னிடம் பேச வந்தேன்
ஆவியில் மேவிய சேதிகளை
கேளென நெஞ்சிடம் கூற வந்தேன்

ஆண் : நினைவுகள் எங்கோ அலைகிறதே
கனவுகள் ஏனோ கலைகிறதே
நிழல் போல் உன்னைத் தொடர்கிறதே
ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆஅ……ஆஅ….

ஆண் : வைகறையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்
உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில்
நாளும் நடத்தும் ஊர்வலங்கள்
வைகறையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்

Leave a Comment