Vedham Nee Iniya Naadham Nee Song Lyrics

in Koyil Puraa

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ
வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ

ஆண் : கருணை மேவும் பூவிழிப் பார்வையில்
கவிதை இன்பம் காட்டுகிறாய்
கருணை மேவும் பூவிழிப் பார்வையில்
கவிதை இன்பம் காட்டுகிறாய்

ஆண் : இளைய தென்றல் காற்றினிலே
ஏ…..ஏ……ஏ……ஏ……ஏ……ஏ…….
இளைய தென்றல் காற்றினிலே
இனிய சந்தப் பாட்டினிலே
இளைய தென்றல் காற்றினிலே
இனிய சந்தப் பாட்டினிலே
எதிலும் உந்தன் நாதங்களே
நினைத்த பொருள் தரும் நிரந்தர சுகம் தரும்

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ

ஆண் : அண்டம் பகிரண்டம்
உனை அண்டும் படி வந்தாய்
அண்டம் பகிரண்டம்
உனை அண்டும் படி வந்தாய்

ஆண் : தண்டை ஒலி ஜதி தருமோ
கமல பாதம் சதிரிடுமோ
தண்டை ஒலி ஜதி தருமோ
கமல பாதம் சதிரிடுமோ
மனமும் விழியும் தினமும்
எழுதும் அழகே
மலையும் கடலும் நதியும் அடியுன் வடிவே

ஆண் : நெஞ்சம் இது தஞ்சம் என
உனைத்தினம் நினைத்தது
நித்தம் ஒரு புத்தம் புது
இசைத்தமிழ் வடித்தது
ஒருமுறை தரிசனமும் தருக
இசையில் உனது இதயம் இசையும்
மனம் குணம் அறிந்தவள்

ஆண் : குழலது சரியுது சரியுது
குறுநகை விரியுது விரியுது
விழிக்கருணை மழை
அதில் நனைய வரும் ஒரு மனம் பரவும்

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ

Leave a Comment