Vetti Veru Vasam Song Lyrics

in Muthal Mariyathai

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : வெட்டி வேரு
வாசம் வெடல புள்ள
நேசம் வெட்டி வேரு
வாசம் வெடல புள்ள
நேசம் பூவுக்கு வாசம்
உண்டு பூமிக்கும் வாசம்
உண்டு

ஆண் : வேருக்கு வாசம்
வந்ததுண்டோ மானே
பெண் : வெட்டி வேரு
வாசம் வெடல புள்ள
நேசம்

ஆண் : பச்ச கிளியோ
ஓஹோ போட்டுக்கிருச்சு
இச்ச கிளியோ ஓஹோ
ஒத்துகிருச்சு

பெண் : பச்ச நெருப்பு
ஒத்திகிருச்சு பச்ச மனசு
பத்திகிருச்சு

ஆண் : கைய கட்டி
நிக்க சொன்னா காட்டு
வெள்ளம் நிக்காது
பெண் : காதல் மட்டும்
கூடாதுன்னா பூமி
இங்கு சுத்தாது

ஆண் : சாமி கிட்ட
கேளு யாரு போட்ட
கோடு
பெண் : பஞ்சுக்குள்ள
தீய வெச்சு சுத்தி
வச்சவக யாரு

ஆண் : வெட்டி வேரு
வாசம் வெடல புள்ள
நேசம் வெட்டி வேரு
வாசம் வெடல புள்ள
நேசம்
பெண் : பூவுக்கு வாசம்
உண்டு பூமிக்கும் வாசம்
உண்டு

ஆண் : வேருக்கு வாசம்
வந்ததுண்டோ மானே
பெண் : வெட்டி வேரு
வாசம் வெடல புள்ள
நேசம்

பெண் : உன்ன கண்டு
நான் சொக்கி நிக்குறேன்
கண்ணுக்குள்ள நான்
தண்ணி வெக்கிறேன்

ஆண் : சொல்லாம
தான் தத்தளிக்கிறேன்
தாளாம தான் தள்ளி
நிக்கிறேன்

பெண் : பாசம் உள்ள
பந்தம் இது பாவமுன்னு
சொல்லாது
ஆண் : குருவி கட்டும்
கூட்டுக்குள்ள குண்டு
வெக்க கூடாது

பெண் : புத்தி கெட்ட
தேசம் பொடி வெச்சு
பேசும்
ஆண் : சாதி மத
பேதம் எல்லாம்
முன்னவங்க செஞ்ச
மோசம்

பெண் : வெட்டி வேரு
வாசம் வெடல புள்ள
நேசம் வெட்டி வேரு
வாசம் வெடல புள்ள
நேசம் பூவுக்கு வாசம்
உண்டு பூமிக்கும் வாசம்
உண்டு

ஆண் : வேருக்கு வாசம்
வந்ததுண்டோ மானே
பெண் : வெட்டி வேரு
வாசம்
ஆண் : வெடல புள்ள
நேசம்

Leave a Comment