Yeru Pudichavare Song Lyrics

in Karaiyellam Shenbagapoo

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பி.சுஷீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

பெண் : ஏரு புடிச்சவரே ஏய்ச்சிப்புட்ட வல்லவரே
ஏனய்யா உங்களுக்கு இந்தப்பொண்ணு தோது இல்ல
ஏரு புடிச்சவ்ரே ஏய்ச்சிப்புட்ட வல்லவரே
ஏனய்யா உங்களுக்கு இந்தப்பொண்ணு தோது இல்ல

பெண் : வேகாத வெயிலுல வேர்த்து களைச்சவள
வேணும்ன்னு சேர்த்துக்குற உங்களுக்கும் ஆசை இல்ல

பெண் : ஏரு புடிச்சவரே ஏய்ச்சிப்புட்ட வல்லவரே
ஏனய்யா உங்களுக்கு இந்தப்பொண்ணு தோது இல்ல

ஆண் : சுட்டிப் பொண்ணு வெள்ளிக்கண்ணு
பட்டுச் சேலை வாங்கி வந்து
கட்டி நான் கண் குளிர
தொட்டுத் தொட்டு பாக்கப் போறேன்

ஆண் : சுட்டிப் பொண்ணு வெள்ளிக்கண்ணு
பட்டுச் சேலை வாங்கி வந்து
கட்டி நான் கண் குளிர
தொட்டுத் தொட்டு பாக்கப் போறேன்

பெண் : பேச்சு உனக்கு பஞ்சமில்ல
பொய் பொரட்டு கொஞ்சம் இல்லை
எம் முரடன் மச்சானுக்கு
என்னை விட்டா யாரும் இல்ல
என்னை விட்டா யாரும் இல்ல

ஆண் : சிங்காரம் பெத்த மவ சிங்கத்துக்கு ஏத்த மக
செல்லமா சொன்னாக்கூட கோபப்படும் செல்லம் அவ
தொட்டாச்சுருங்கி அவ தூத்துக்குடி முத்து நகை
என்னம்மா செல்ல வள்ளி எம்மேலதான் கோவம் என்ன

பெண் : ஏரு புடிச்சவ்ரே ஏய்ச்சிப்புட்ட வல்லவரே
ஏனய்யா உங்களுக்கு இந்தப்பொண்ணு தோது இல்ல

பெண் : ஆசைப்பட்டு கேட்டதெல்லாம்
வாங்கியார வக்கு இல்ல
வாயி மட்டும் உங்களுக்கு
கொஞ்சம் கூட வெக்கம் இல்ல

பெண் : ஆசைப்பட்டு கேட்டதெல்லாம்
வாங்கியார வக்கு இல்ல
வாயி மட்டும் உங்களுக்கு
கொஞ்சம் கூட வெக்கம் இல்ல

ஆண் : வெக்கம் மட்டும் பொம்பளைக்கு
அது எதுக்கு ஆம்பளைக்கு
பாரடி உன் ஒடம்ப தங்கத்துல பூட்டப்போறேன்……
தங்கத்துல பூட்டப்போறேன்

பெண் : ஏரு புடிச்சவரே ஏய்ச்சிப்புட்ட வல்லவரே
ஏனய்யா உங்களுக்கு இந்தப்பொண்ணு தோது இல்ல
ஆண் : சிங்காரம் பெத்த மவ சிங்கத்துக்கு ஏத்த மக
செல்லமா சொன்னாக்கூட கோபப்படும் செல்லம் அவ

பெண் : ஏரு புடிச்சவரே ஏய்ச்சிப்புட்ட வல்லவரே
ஏனய்யா உங்களுக்கு இந்தப்பொண்ணு தோது இல்ல

Leave a Comment